வெள்ளி, 27 மார்ச், 2020

வேப்பம் பூ

வேப்பம்பூ

கல்லீரல் தொழிலை சரிப்படுத்த

வேப்பம்பூ

வேப்பம்பூ ஒரு கைப்பிடி அளவு
இதில் சுடுநீர் போட்ட ஆறுகிற வரை மூடிவைத்து குடித்து வரவும்.

தினமும்  வேப்பம் பூவை இது போல் குடித்து வர
அக்னி மந்தம்  நீங்கி
கல்லீரலின் தொழில் சரிப்படும்.

வியாழன், 26 மார்ச், 2020

துத்தி

துத்தி
Abutilon indicum


துத்தி பூ

துத்தி பூவின் சூரணம் காலை மாலை பாலில் உட்கொள்ள
காசம்
நுரையீரல் கபம்
இரைப்பு
இரத்த வாந்தி தீரும்.

துத்தி விதை சூரணம் 

தேனில் கலந்து கொள்ள
கருமேகம்
வெண்மேகம்
உடல் சூடு
மேக அனல் நீங்கும்.



துத்தி விதை

துத்தி விதையை அனலில் தூவி புகையை ஆசனவாயில் பிடிக்க கீரிப் பூச்சிகள் நீங்கும்.



துத்தி இலை

துத்தி இலையை கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்க
ஈறு வீக்கம்
பல்வலி நீங்கும்.

இரத்த மூலம் நீங்க

துத்தி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் ஆசனத்தில் வைத்து கட்ட
இரத்த மூலம்
சீழ் மூலம் நீங்கும்.

துத்தியின் இலைகளால் மூலத்தினால் வரும் ரத்தத்தை நிறுத்தும்.

வெள்ளி, 20 மார்ச், 2020

முருங்கை விதை




முருங்கை விதை

முருங்கை விதை


முருங்கை விதையை தூள் 
பாலில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால்   தாது புஷ்டி உண்டாகும்.

முருங்கை பூ

முருங்கை பூ

முருங்கைப் பூவை பாலில் போட்டு வெந்து குழையும்படி காய்ச்சி இரவில் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் தாது புஷ்டி ஆகும்

கானா வாழை

கானா வாழை
Commelina bengalensis



கானா வாழை இலையுடன்
முருங்கை இலை



ஒரு கைப்பிடி எடுத்து இரண்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அரை கிளாஸ் அளவு பசும்பாலில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து 40 நாள் குடித்து வர

 தேசத்தில் புதிய ரத்தம் விருத்தி உண்டாகும்.


சுரத்தில்

கானாவாழை சமூலம்
மிளகு
சீரகம் 
சேர்த்து கஷாயம் செய்து  குடித்துவர
தாகம் மிகுதியாக உள்ள சுரத்தில் 
தாகமும் 
சுரமும் நீங்கும் .




புதன், 11 மார்ச், 2020

காசுக்கட்டி

காசுக்கட்டி
காய்ச்சு கட்டி
Acacia catechu extract


Catechu சில துவர்ப்பு உள்ள
மரங்களின்  மர பட்டைகளின் சாறு அல்லது பிசின்களை  காய்ச்சி
செய்வது .

காசுக்கட்டி

உதிர போக்கு
விரண்களை ஆற்றும்.
வாய்ப்புண்
தொண்டைப்புண்
குரல் அடைப்பு
குடல் புண்
நாக்குப்புண்க்கு
காசுக்கட்டி தூளை தடவ நீங்கும்.


பற்பொடி

காசுக்கட்டி
கடுக்காய்
கலந்த பற்பொடி பல் ஈறுகளுக்கு
வலுவை தரும்.



கிராணி சீத பேதி
நீங்க.

காய்ச்சுக்கட்டி பொடி
வில்வப்பழ தோல் பொடி
சேர்த்து பயன் படுத்த குணமாகும்.

பெரும்பாடு நீங்க

காசுக்கட்டி
பூங்காவி செந்தூரம்
கலந்து தர பெரும்பாடு தீரும்.

புண்கள் ஆற
காசுக்கட்டி தூள் பயன் தரும்.


சேற்றுப்புண்

காசிக்கட்டியை அரைத்து பூச
சேற்றுப்புண் ஆறும்.


முலைக்காம்பு  புண்

காசுக்கட்டி திரவத்தினால் முலைகாம்பு
புண்களை கழுவ  புண்கள் 
ஆறும்.


திங்கள், 9 மார்ச், 2020

கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி

வேறு பெயர்கள்:

கரிசாலை
கரிப்பான்
கரிப்பான்
கையான்தகரை
Eclipta prostrata




கரிசலாங்கண்ணி

காமாலை
வீக்கம்
பாண்டு

பல்நோய்கள்
அரிப்பு நோய்
கல்லீரல்  வீக்கம்


ஈரல் வீக்கம்
பொடுகு

யானைக்கால்
ஜலதோஷம்
முடி உதிர்தல்
உஷ்ணம்
செவி நோய் குணமாகும் தன்மை
கொண்டது.

கரிசலாங்கண்ணி
கல்லீரல்
மண்ணீரல்
நுரையீரல்
சிறுநீரகம்
உறுப்புகளில் உள்ள கெட்ட நீர்களை அகற்றும்.


பாண்டு ,சோகை  தீர

கரிசாலை இலையை சிறிது மிளகுடன் கூட்டி அரைத்து தினமும் இருவேளை சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வந்தால்
பாண்டு ,சோகை தீரும்.

கரிசலாங்கண்ணி இலையை மிளகுடன் அரைத்து சிறு சிறு உருண்டைகள் செய்து ஒரு தேனில் போட்டு வெயிலில் வைத்து தினமும் ஒரு உருண்டை வீதமும் சாப்பிட்டு வர  சோகை  பாண்டு (அனீமிக்)
தீர்ந்து இரத்தம் ஊறும்.

இரத்தத்தில் இரும்பு சத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது .இந்த காயகல்ப மூலிகையான
கரிசாலை.


கரிசலாங்கண்ணி சாறு  
நல்லெண்ணெய் 
சம அளவு 
சேர்த்து காய்ச்சி ஒரு தேக்கரண்டி வீதம் நான்கு தினமும் சாப்பிட்டு வர காசநோய் குணமாகும். இந்த
கரிசாலை தைலத்தை
 தலைக்கு காய்ச்சி பூசி வந்தால் உடல் வெப்பம் கண்ணெரிச்சல் கண் நோய்கள் நீங்கும்.

கரிசாலை இலையுடன் 
மிளகு 
சேர்த்து 
நல்லெண்ணை போட்டு காய்ச்சி தலை முழுகி வரலாம்.
காமாலை நோய் நீங்கும்.

மஞ்சள் கரிசாலை இலையை உலர்த்தி சூரணம் செய்து வேளைக்கு இரண்டு சிட்டிகை தேனில் அல்லது நெய் / வெந்நீர் சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும்.





சனி, 7 மார்ச், 2020

கருநொச்சி

கரு நொச்சி
Vitex negundo
Five leaved chaste tree




கல்லீரல் வீக்கம்
கீல்வாதம்
ரத்த பேதி
ரத்த வாந்தி
தலைவலி
வாத நோய்
குளிர் ஜுரம் நீக்கும் தன்மை கருநொச்சிக்கு கொண்டது .

இரைப்பு நோய் அடங்க:

நொச்சி கொழுந்து

மிளகு
லவங்கம்
சேர்த்து மென்று தின்ன
இரைப்பு நோய் அடங்கும்.


இருமலுடன் ரத்தம் வருதல் தீர:

நொச்சி இலை


பூண்டு
மிளகு
கரிசாலை
கலந்து உட்கொள்ள இருமலுடன் ரத்தம் வருதல் குணமாகும்.

நொச்சி

குளிர் சுரம்
முறைசுரம் 
வாத நோய் 
வாத சுரம் தீரும் .

நொச்சி இலையை மணலுடன் கலந்து வறுத்து ஒத்தடம் கொடுக்கலாம் . 

நொச்சி இலை பயன் படுத்தி ஆவி பிடித்தால் ஜுரம் தலைவலி நீங்கும்.

நொச்சி இலைச் சாறு எண்ணெய் சேர்த்து காய்ச்சி தலையில் பூசி வந்தால்

பீனிசம்
தலைபாரம் 
நீர்க்கோர்வை நீங்கும்.


சிறுகண் பீளை


சிறுகண்பீளை

சிறு பீளை
பொங்கல் பூ
Avera lanata



சிறுநீரக கற்கள் நீங்க

சிறுகண் பீளை சமூலம்
நெருஞ்சில்
சேர்த்து கசாயம் காய்ச்சி பயன்படுத்தலாம்.


சிறுபீளை வேர்:

 சிறுபீளை வேரை காய்ச்சி குடித்துவர  பெண்களுக்கு வலுவை தரும்.

சிறுபீளை சாறு

சூதக வலி
சிறுநீர் தடை
நீர் எரிச்சல் தீர
சிறுபீளை சாறு
காலை மாலை குடிக்கலாம்.

சிறுபீளையை போட்டு ரசம்  செய்து உணவாக உட்கொள்ளலாம்.


நீரடைப்பு கல்லடைப்பு 

சிறுபீளை இலைச்சாறு நீரடைப்பு கல்லடைப்பு முதலிய நீர் வியாதிகளை நீக்கும் .
பெரும்பாட்டையும் போக்கும்.

புதன், 4 மார்ச், 2020

கோபுரம் தாங்கி


கோபுரம் தாங்கி
Andrographis echioides

முடி கொட்டுதல்


புழு வெட்டு  நீங்க


கோபுரம் தாங்கி இலை சாறுடன் 
 நல்லெண்ணெய்  சமஅளவு
கலந்து பதமாகக் காய்ச்சி தடவி   குளித்தால் பிரச்சினைகள் நீங்கி
தலைமுடி நன்கு வளரும்.

தொட்டா சிணுங்கி

தொட்டாசுருங்கி

தொட்டா சிணுங்கி
Mimosa pudics
Touch me not plant

வீரியம் - வெப்பம்.


தொட்டாசுருங்கி இலையையும் வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் சேர்த்து சாப்பிட நீரிழிவு நீங்கும்.

தொட்டாசுருங்கி இலையின் பொடியை ஒரு தேக்கரண்டி காலை மாலை சாப்பிட்டு வர மூலம் தீரும்.

தொட்டால் சிணுங்கி இலையை அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் சாப்பிட்டு வர சிறுநீரக கற்கள் வெளியேறும்.
சிறுநீர் தொடர்பான நோய்கள் குணமாகும்.








திருநீற்றுப்பச்சிலை

திருநீற்றுப்பச்சிலைOcimum basilicum


திருநீற்றுப்பச்சிலை உடலின் வெப்பத்தை அகற்றி
உடலைத் தேற்றும்.



திருநீற்றுப்பச்சிலை சாறு தேன் கலந்து கொடுக்க மார்பு வலி
மேல் சுவாசம் ,இருமல்
வயிற்று வாய்வு தீரும்.

திருநீற்றுபச்சிலை விதையை நீரில் ஊறவைத்து சாப்பிட
வயிற்றுக் கடுப்பு ,இரத்த கழிச்சல் நீர் எரிச்சல் ,வெட்டை  குணமாகும்.

திருநீற்றுப்பச்சிலை இலையை அரைத்து கட்டிகள் மேல்
பூச கட்டிகள் கரையும்.

திருநீற்றுப்பச்சிலை இலையை முகரவைத்தால் தலைவலி
இதய நடுக்கம் தூக்கமின்மை நீங்கும்.

இன்புறா

இன்புறா


Oldenlandia umbellata
இன்புரல்
சாயவேர்

சுவை இனிப்பு
கோழை அகற்றி

இன்புறா இலையின் சாற்றை
பாலில் கலந்து சாப்பிட்டு வர மார்பு எரிச்சல் நீங்கும்.

இன்புறா இலையை  /  இன்புறா இலையின் பொடியை அரிசிமாவில் கலந்து அடை சாப்பிட்டு வர
இரைப்பிருமல் சுவாசகாசம் சயம் எலும்புருக்கி தீரும்.

இன்புறா இலை நீரில் கலந்து காய்ச்சி காலை மாலை கொடுத்து வர
சுவாசகாசம் ,இருமல் குணமாகும்.

இன்புரல் சமூலமாகவும்
கபக்கட்டு ,உடல்சூடு ,நெஞ்சறிவு
குருதியழல் , வாய்புண் தீரவும் பயன்படும்.




பூனைக்காலி வெள்ளை வெட்டை தீர

பூனைக்காலி வெள்ளை வெட்டை  பெரும்பாடு பாரிசவாதம் வயிற்று வீக்கம் சோர்வு  கற்றாழை நாற்றம்  கரப்பான்  போன்றவை நீங்கி உடல் வலுக்கும்.