திருநீற்றுப்பச்சிலைOcimum basilicum
திருநீற்றுப்பச்சிலை உடலின் வெப்பத்தை அகற்றி
உடலைத் தேற்றும்.
திருநீற்றுப்பச்சிலை சாறு தேன் கலந்து கொடுக்க மார்பு வலி
மேல் சுவாசம் ,இருமல்
வயிற்று வாய்வு தீரும்.
திருநீற்றுபச்சிலை விதையை நீரில் ஊறவைத்து சாப்பிட
வயிற்றுக் கடுப்பு ,இரத்த கழிச்சல் நீர் எரிச்சல் ,வெட்டை குணமாகும்.
திருநீற்றுப்பச்சிலை இலையை அரைத்து கட்டிகள் மேல்
பூச கட்டிகள் கரையும்.
திருநீற்றுப்பச்சிலை இலையை முகரவைத்தால் தலைவலி
இதய நடுக்கம் தூக்கமின்மை நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக