புதன், 22 ஜூலை, 2020

சீந்தில் நீரழிவு இரைப்பு இரத்தக் கொதிப்பு விஷக்காய்ச்சலை நீக்கும்.

சீந்தில்

நீரழிவு
இரைப்பு
இரத்தக் கொதிப்பு
விஷக்காய்ச்சல் நீக்கும் தன்மை கொண்டது.


சீந்தில் வகைகள்

பொற்சீந்தில்
பேய் சீந்தில் -கருடன் கிழங்கு என உண்டு.


சீந்தில்
சீந்தில்
சிறுநீர் பெருக்கி 
உரமாக்கி 
வெப்பம் அகற்றி
 உடல் தேற்றி
 காமம் பெருக்கும் 
குணங்கள் உண்டு.

 சாகா மூலி சஞ்சீவி
 சோமவல்லி ,அமிர்த கொடி 
 என்ற பெயர் உண்டு.

சீந்தில் கொடி
   
சீந்தில் கொடியில் இருந்து எடுக்கும்
சீந்தில் உப்பு
சீந்தில் சர்க்கரை

அதிக தாகம் 
என்புருக்கி
 ரத்த வாந்தி
 கணச்சூடு 
 மதுமேகம் தீரும்.

சீந்தில் முதிர்ந்த கொடிகளை தோல் நீக்கி
வெட்டி நிழலில் உலர்த்தவும்.
பொடி செய்யவும்.
இந்த சீந்தில் பொடியில்
கற்கண்டு தூள்  /  பனங்கற்கண்டு
சேர்த்து 
ஆறு மாதங்கள் தினமும் காலை மாலை அரை கரண்டி வீதம் சாப்பிட்டு வர
பால் அருந்தி வர ஆயுள் நீடிக்கும் .
 
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் 
கை கால் அசதி 
பெரும் தாகம்
எடை குறைவு 
தூக்கமின்மை முதலியன தீரும்.
கண் மங்குதல் குணமாகும்.


டயபடீஸ் neuritis  நீங்கும் தன்மை கொண்டது.


 ( டயபடீஸ் neuritis  
நுண்ணிய ரத்தகுழாய்களும் பாதிக்கப்பட்டு நரம்பின் கடைசிப்பகுதிக்கு சத்தும் கிடைக்காமல் ஆக்சீசன் தடைப்படும்.  நுண் இரத்த ஊட்டம் பாதிக்கப்படுவதால் விழித்திரை சிறுநீரகம், நரம்பு மண்டலம்   பாதிக்கப்படுகிறது.)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூனைக்காலி வெள்ளை வெட்டை தீர

பூனைக்காலி வெள்ளை வெட்டை  பெரும்பாடு பாரிசவாதம் வயிற்று வீக்கம் சோர்வு  கற்றாழை நாற்றம்  கரப்பான்  போன்றவை நீங்கி உடல் வலுக்கும்.