குப்பைமேனி இதற்கு பூனைவணங்கி என்று பெயரும்
உண்டு.
குப்பைமேனி இலை உலர்த்தி பொடி
1 சிட்டிகை பசும்பாலில்
கலந்து தினமும் ஒருவேளை
காலை மட்டும்
15 நாட்கள்
சாப்பிட
தேகம் குளிர்ந்து
சரீர வனப்பு உண்டாகும்.
குப்பைமேனி
குப்பைமேனி சாறு
சங்கு அளவு உள்ளுக்குக் கொடுக்க வாந்தியாகி கோழை வெளிப்படும் .
குடல் கிருமிகள் சாகும்.
சில விஷங்களை நீக்கும்.
உடலில் தடிப்பு ஏற்பட்டால் குப்பைமேனி இலைச்சாற்றை சுண்ணாம்பு சேர்த்து பூச குணமாகும் .
இரும்பல் ,இரைப்பு தீர
குப்பைமேனி இலை சூரணம் 5 குண்டுமணி எடை
தேனில்
கொடுத்து வர
இரும்பல் ,இரைப்பு முதலியன நீங்கும்.
சொறி சிரங்கு நீங்க
குப்பைமேனி இலையை
மரம் மஞ்சளுடன்
சேர்த்து பூச புண் சொறி சிரங்கு குணமாகும்.
உடல் தளர்ச்சி நீங்க
குப்பைமேனி செடியில்
பச்சை நிற பூக்கள் வரும் காலத்தில்
குப்பைமேனியை பறித்து கழுவி
பால் விட்டு வெள்ளை துணி மேல் புட்டு அவிப்பது போல்
செய்து வெந்த இலைகளை
ஆறவைத்து தூள் செய்து
சலித்து இதில்
கற்கண்டு சேர்தது
வைக்கவும்.
காலை மாலை
குப்பைமேனி பொடியுடன்
பால் சாப்பிட்டுவர
உடல் தளர்ச்சி நீங்கி
ஆயுள் நீடிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக