Lawsonia inermisHenna
மருதாணி இலை பித்தத்தை தணிக்கும்.
தசை நரம்புகளைச் சுருங்கச் செய்யும் .
மருதாணி வேர்
நோய் நீக்கி உடல் தேற்றும் .
தாது வெப்பு அகற்றும் .
விதை ,சதை நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும்.
மருதாணி இலை 10 கிராம்
மிளகு 6
பூண்டு
மஞ்சள் 5 கிராம்
மைபோல் அரைத்து காலை வெறும் வயிற்றில் அருந்த
மேக நோயால் வரும்
உடல் நமைச்சல்
தினவு
அரிப்பு தீரும்.
மருதாணி இலையை அரைத்து நீரில் கலந்து வாய் கொப்பளிக்க வாய்ப்புண் தீரும்.
சிறு காயம் ,சிராப்பு இந்த நீரில் கழுவ புண் ஆறும்.
முடிவளர
மருதாணி இலையை அரைத்து
தேங்காய் எண்ணெயில்
கலந்து பச்சை நிறம் மாறாமல் காய்ச்சி தடவி வர முடி செழித்து வளரும்.
மருதாணி பூ
தூக்கம் வர மருதாணி பூ
மருதாணி பூவை படுக்கை அறையில் வைத்தால் நல்ல தூக்கம் வரும்.
கால் ஆணி
வேர்ப்பட்டையை அரைத்து கட்ட கால் ஆணி குணமாகும்.
பெரும்பாடு தீர
20 கிராம் இலையை அரைத்து பாலில் கலக்கி காலை மட்டும் 3 நாள் சாப்பிட்டு
பால் சோறு மட்டும் உண்டுவர வெள்ளை பெரும்பாடு
மிகையான சிறுநீர் கழித்தல் தீரும்.
மருதாணி இலையை அரைத்துச் சொத்தை நகங்களுக்கு வைத்துக் கட்டிவர ஈரம் படாமல்
வைக்க சொத்தை வராமல் இருக்கும்.
மருதாணி இலை
மருதாணி விதை
சம அளவு அரைத்து சிறு துணியில் முடித்து கருவாயில் திரித்துவம் அதற்கு உண்டான வெள்ளை
பெரும்பாடு ஆகியவை மூன்று நான்கு நாளில் குணமாகும்.
காமாலை ,சதையடைப்பு நீங்க
மருதாணி வேர் பட்டை
மருதாணி வேர் பட்டையை சிதைத்து நீரில் ஊறவைத்து எட்டுக்கு ஒரு பாகமாகக் காய்ச்சி காலை மாலை சாப்பிட்டு வர
காமாலை
கல்லடைப்பு
சதையடைப்பு
உதிர சிக்கல் தீரும்.
நீரழிவு
மருதாணி இலை கசாயம்
படிகாரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக