அருகம்புல்
Cynodon dactylon pers
சஞ்சீவி என்ற பெயரும் உண்டு.
குணம்: சிறுநீர் பெருக்கி
அறுக்கவேர் 6 அடி வரை இருக்கும்.
அருகம்புல்
அருகம்புல்
வலிப்பு நோய்
மகோதரம்
ரணங்கள்
இரத்தபேதி
சீதபேதி
வெட்டுக்காயம்
ரத்தமூலம் இவைகளை குணப்படுத்தும்.
அருகம்புல்
கணுக்களை நீக்கி சமூலம் 30 கிராம்
அரைத்துச் சம அளவு வெண்ணெய் கலந்து 20 முதல் 40 நாட்கள் சாப்பிட்டு வர
உடல் தளர்ச்சி நீங்கி உறுதி படும்.
அறிவு மிகும்.
முக வசீகரம் உண்டாகும்.
சிறுநீர் தாரையில் உள்ள புண்ணால் கடுப்பு சிறுநீருடன் இரத்தம் போதல் தீர
அறுகம்புல் சமூலம். 30 கிராம் கீழாநெல்லிச். 15 கிராம் மைபோல் அரைத்து தயிரில் கலந்து கலக்கி குடிக்க
வெள்ளை
மேக அனல்
உடல் வறட்சி
சிறுநீர் தாரையில் உள்ள புண்ணால் கடுப்பு சிறுநீருடன் இரத்தம் போதல் தீரும்.
அருகம்புல், மஞ்சள் சேர்த்து உடலில் தடவி குளித்து வர
சொறி சிரங்கு
அடங்காத தோல் நோய்
வேர்குரு
தேமல்
சேற்றுப்புண்
அரிப்பு
வேனல் கட்டி தீர
காது மூக்கு ஆசனவாய் இரத்த ஒழுக்கு நிற்க
வெப்பம் தணிய
மாத விலக்குச் சிக்கல் நீங்க
அருகம்புல் 30 கிராம்
மாதுளை இலை 30 கிராம்
அரை லிட்டர் நீர் விட்டுக் காய்ச்சி குடித்து வரவும்.
மூலம் குணமாக
அருகம்புல் 30 கிராம்
அரைத்துப் பாலில் கலந்து பருகி வர இரத்த மூலம் குணமாகும்.
அருகம்புல்
சிறுநீர் பெருக்கியாகவும் நோய் நீக்கி உடல் தேற்றியாகவும் செயல்படும்.
கண்நோய்கள் தீர எண்ணெய்
தலைக்கு எண்ணெய்
அருகம்புல்
சமூலம் 100 கிராம்
மிளகு 75 கிராம்
சீரகம் 50 கிராம்
இடித்து ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு
15 நாட்கள் கடும் வெய்யிலில் வைத்து 45 நாள்கள் தலையில் தடவி வரவும்.
கண்நோய்கள் தீரும்.
அருக்கம் வேர் இடித்து நல்லெண்ணையில் காய்ச்சி அமுக்கரா கிழங்கு
பூமி சர்க்கரைக் கிழங்கு
பால் விட்டு அரைத்துக் கலக்கி சிறு தீயில் பதமாகக் தைலம்
காய்ச்சவும்.
இதை காலையில் தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வர
வாதம்
பித்தம்
நெஞ்சு வலி
வயிற்று எரிச்சல்
மூலச்சூடு
தலையில் நீர் கடுப்பு தீரும்.
சரும நோய்களுக்கு
அருக்கம்புல்
அருகம்புல்லை சிறுதுண்டுகளாக நறுக்கிக் பீங்கான் பாத்திரத்தில் இட்டு சரக்கு முழுக்க சுத்தமான நல்லெண்ணெய் விட்டு சூரிய வெப்பத்தில் ஒரு வாரம் வைத்து எடுத்து பத்திரப்படுத்தவும்.
இந்தத் தைலத்தை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து கண்களுக்கும் சிறு துளிகள் விட்டு வெந்நீரில் குளித்து வரவும்.
இதனால் கண்கள் பிரகாசமாக ஆவதுடன் சரும நோய்கள் எல்லாம் தீரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக