புளியாரை
Oxalis corniculata
புளியாரை தரையோடு தரையாய் படரும் சிறிய கொடியினம் .
புளியாரை புளிப்பு சுவை கொண்டது.
புளியாரை
காயசித்தி மூலிகை.
கோழையை அகற்றும்.
புளியாரைக் கீரை பித்தம் மயக்கம் கிராணி ரத்தமூலம் இவைகளை நீக்கும்.
பசியை தூண்டும் .
ஒல்லியான உடல் கொண்டவர்கள் சாப்பிட உடல் தேறும்.
வலிமை பெறும்.
புளியாரைக் கீரையை மற்ற கீரை போல் சமைத்து சாப்பிட உணவில் சேர்த்து சாப்பிட்டு வர மலபந்தம் உடல் அசதி உடல் வெப்பம் முதலியவை நீங்கும் உடல் வன்மை பெறும்.
புளியாரைக் கீரையை மற்ற கீரை போல் சமைத்து சாப்பிட உணவில் சேர்த்து சாப்பிட்டு வர மலபந்தம் உடல் அசதி உடல் வெப்பம் முதலியவை நீங்கும் உடல் வன்மை பெறும்.
புளியாரைக் கீரையை பித்த சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் சிறந்தது.
காம்பில் ஒரே ஒரு இலை கொண்டது வல்லாரை.
இரண்டு இலை கொண்டது கல்லாறை .
மூன்று இலை கொண்டது புளியாரை .
நான்கு இலை கொண்டது நீராரை.
புளியாரை
வெப்பத்தை தணிக்கும் .
தசை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்.
புளியாரை கீரையை பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து உண்டு வர
மூலம்
வாய்வு
பித்தம் மிகுதி
சுவையின்மை மயக்கம் தீரும்.
புளியாரை இலையை அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து சாப்பிட்டு வர வயிற்றுப் புண் தீரும்.
புளியாரை இலையை அரைத்து முகத்தில் தடவி வர முகப்பருக்கள் மறையும்.
புளியாரை கீரையுடன்
நெய் சாப்பிட
இரத்த பித்தம்
வாந்தி
வறட்சி
காமாலை
இருமல்
சோகை
பாண்டு
இரத்த காசம்
இரத்த மூலம் நீங்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக