வெள்ளி, 17 ஏப்ரல், 2020

அமுக்கரா அஸ்வகந்தா

அமுக்கரா
அஸ்வகந்தா
Withania somnifera
Winter cherry


சீமை அமுக்கரா
நாட்டு அமுக்கரா
என இரு வகை உண்டு.


அமுக்கரா கிழங்கை பாலில்
வேக வைத்து காயவைத்து
சூரணம் செய்து வைத்துக் கொள்ளவும்.


கரப்பான்
வீக்கம்
ஜுரம்
வாய்வு

பலவீனம்
பசியின்மை
உடல் பருமன்
வெப்பம் தீரும்.
உடல் உரமாக்கும்.
ஆண்மை அழகு ஆயுள் கூட்டும்
பண்புகள் கொண்டது.
கபத்தைக் கரைத்து இருமலைத் தணிய
நரம்பு தளர்ச்சி ,
தூக்கம் இன்மை நீங்க
அமுக்காரா சூரணம்
காலை மாலை
பாலில் சாப்பிடவும்.


பார்வை தெளிவு பெற


கண் கோளாறு உள்ளவர்கள்
அமுக்கரா கிழங்கு
அதிமதுரம்
சம அளவு எடுத்து சூரணம் செய்யவும்.
சூரணத்தை
காலை மாலை
நெல்லிக்காய் சாறுடன்
கலந்து சாப்பிட்டு வந்தால் பார்வை தெளிவு பெறும்.

மூல சூடு


மூலசூட்டை தணிக்க
அமுக்காரா
மூல சூட்டை தணித்து உடல் பலத்தை அதிகரிக்கும் தாது விருத்தியாகும்.

பாண்டு சூலை நீங்கும்.

உடல் தளர்ச்சி நீங்கும்.


பெண் உடல் பலம்

பெண்கள் உடல் பலம் பெற
கருவுற்ற பெண்கள்
காலை மாலை
அமுக்கார சூரணம் சாப்பிட்டு வர பெண்களின் உடல் பலம் பெற்று சுகப்பிரசவம் ஏற்படும்.


அமுக்கரா பொடியுடன்
பாதாம் பருப்பு
ஏலம்
பாலில் கலந்து பருகலாம்.


நீரழிவுக்கு 
அமுக்கரா 

அமுக்கரா கிழங்கு       50 கிராம் ஆவாரை பஞ்சாங்கம்
சீரகம்                               15 கிராம்

சூரணம் செய்து பசும்பாலில்  நிழலில் உலர்த்தவும்.
இதை
அப்பிரக செந்தூரம்   -    குன்றி மணி அளவு கலந்து 48 நாட்கள் சாப்பிட மதுமேகம் குணமாகும்.

அமுக்கிரா skin problems
கால் கடுவன்
Eczema

அமுக்கரா சூரணம்.      50 கிராம் வெள்ளருகு                   50 கிராம்
கெருடன் கிழங்கு சூரணம்  50 கி

பசும்பால் மண் பாத்திரத்தில் விட்டு சூரணத்தை அதன்மேல் வைத்து சுற்றிலும் அரைத்துக்கொள்ளவும் பிறகு நிழலில்
திரிகடி அளவு காலை மாலை 40 நாள் கொடுக்க வேண்டும்.

பத்தியம்
மீன் கத்திரிக்காய் கோழி கறி சாப்பிடகூடாது


முடி நிறம் மங்குதல் குறைய
முடி உதிர்தல் பிரச்சினை நீங்

அமுக்கரா சூரணம்
அயசெந்தூரம்
கலந்து சாப்பிடவும்.

அமுக்கரா அசுவகந்தி

கிரந்தி

கண்ட மாலை

மேகம் புண் நீங்கும்.

விந்து ஊறும்.

இடுப்புவலி தீரும் .

ஆண்மை  கூடும்

அழகு ஆயுள் கூடும்.



அமுக்கரா சூரணம்

 லவங்கம்                1  பங்கு

 சிறு நாகப்பூ           2 பங்கு

 ஏலம்                            4 பங்கு

 மிளகு         ‌‌.           8 பங்கு

 திப்பிலி                 16 பங்கு

 சுக்கு                        32  பங்கு

 அமுக்கரா                64  பங்கு

 இவற்றை பொடி செய்யவும்.

 இதில் 

 சர்க்கரை                128  பங்கு

 சேர்க்கவும்.

இந்த அமுக்கரா சூரணத்தை

தேன் /சுடுநீரில் 1-2 கிராம்

சாப்பிட

 வெட்டை 

 வீக்கம் 

 பாண்டு 

 விந்து நட்டம் தீரும்.


அசுவகந்தி

அஸ்வகந்தா சூரணம் சம அளவு சர்க்கரை கூட்டி காலை மாலை அரைத் தேக்கரண்டி பாலுடன் சாப்பிட்டு வர    டிபி  நோய் குணமாகும்.

ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் சாப்பிட்டு வர சக்தி பெருகும்.

நன்றாக பசி எடுக்கும்.

முதியோர் உடல் தளர்ச்சி படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நிலை நீங்கும்..


அமுக்கரா சூரணம் 
நெய்யுடன் 
சாப்பிட உடல் பெருகும் .


அமுக்கரா சூரணம் 
 சுடு நீருடன் உண்ண உடல் மெலியும்.

அமுக்கரா சூரணம்
எள்ளு
உளுந்து 
கருப்பட்டி விட்டு தேன் நெய் கூட்டி பால் சாப்பிட தாது செழித்து உடல் வலுக்கும்.



வெள்ளி, 10 ஏப்ரல், 2020

கீழாநெல்லி

கீழாநெல்லி


Botanical name-Phyllanthus niruri
Common name -seed under leaf
                                Stone breaker

கீழாநெல்லி:
உடல் வெப்பம்
கண்நோய்கள்
காமாலை
நீரழிவு
நீரடைப்பு
நாவரட்சி
சொறி சிரங்கு
வெள்ளை ஒழுக்கு
பலவீனம்

நீக்கும்.


ரத்தம் ஊறி
சோகை
காமாலை 
உடல் வெளுப்பு தீர


கீழாநெல்லி சமூலத்தை பாலில் கலக்கி குடித்து வந்தால்
உடலில் ரத்தம் ஊறும்.

காமாலை 
சோகை 
உடல் வெளுப்பு தீரும்.

நந்தியா வட்டை பூ

நந்தியா வட்டை



நந்தியா வட்டை


கண்படலம்
கண் காசம்
மண்டை குத்து

நீக்கும் தன்மை கொண்டது.


நந்தியாவட்டை பூ

நந்தியாவட்டைப் பூவை கண்களில் ஒத்தடம் கொடுக்கக் கண் எரிச்சல் நீங்கும்.

நந்தியாவட்டை பூ. - 50 கிராம்
ஒரு பாட்டிலில் போட்டு நல்லெண்ணெயில் போட்டு மூழ்க பத்து  நாள் வெயிலில் வைக்க வேண்டும்.
ஒரு துளி காலை மாலை கண்ணில் விட்டுவர
 கண் படலங்கள்
 பார்வை மந்தம் நீங்கும்.




முடக்கத்தான்

முடக்கத்தான்

Cardiospermum halicacabum
முடக்கத்தான்


முடக்கத்தான்


முடக்கத்தான்

கருப்பையில் உண்டாகும் கிரந்தி
கரப்பான்  நீக்கும்.
காலில் உண்டாகும் வாதம் குறையும்.
மலச்சிக்கலை போக்கும். 
 வாயு நீக்கும்
 மலமிளக்கி
கீழ்வாயு
பாரிச வாய்வும் குணமாகும்.
வாத பிடிப்பு வீக்கத்தைக் குறைக்கும்.


உடல் வலி

முடக்கத்தான் இலையை அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட உடல் வலி தீரும்.


மலச்சிக்கல் தீர

முடக்கத்தான் இலையை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி உணவோடு ஒரு வாரம் மலச்சிக்கல் தீரும் .
வாயு களையும்.

கீல்வாத வீக்கம்

முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டி வர கீல்களில் உள்ள வாத பிடிப்பு வீக்கம் தீரும்.

காது வலி

முடக்கத்தான் இலையை வாட்டி பிழிந்த சாறு 2 துளி  மட்டுமே காதில் விட காதுவலி தீரும்.

பேதி ஆக

முடக்கத்தான் இலையை வதக்கி
பூண்டு  சிறிது
 மிளகு 10 
சிதைத்து 
அரை லிட்டர் நீரில் 200 மில்லியாக காய்ச்சி குடித்து வர சீத பேதி ஆகும்.
பேதி நிற்க மோர் சாப்பிடவேண்டும் 
அல்லது எலுமிச்சம்பழம் மோரில் பிழிந்து கொடுக்க பேதி நிற்கும்.

மூலம்

முடக்கத்தான் வேர் ஒரு பிடி நீரில் போட்டுக் காய்ச்சி காலை மாலை 100 மில்லி
என 21 நாட்கள் சாப்பிட்டு வர மூலம் குறையும்.


பாரிச வாய்வு

முடக்கத்தான் இலை 
சூரத்து ஆவரையிலை
உத்தாமணி இலை 
வகைக்கு ஒரு பிடி
வதக்கி 
 நீரில்
காய்ச்சி
200 மில்லியாகக்  காலை மட்டும் 3 நாட்கள் கொடுக்கலாம்.

ஒரு வாரம் கழித்து மீண்டும் இதுபோல் மூன்று நாட்கள் கொடுக்கலாம்.
பாரிச வாய்வு குறையும்.



செவ்வாய், 7 ஏப்ரல், 2020

கத்தக்காம்பு

கத்தக் காம்பு

Gambir

Khair

Khadira


கத்தக் காம்பு

கம்பீர் செடி 

கசப்பு சுவை கொண்டது.


சிவப்பு கத்த காம்பு

சாம்பல் நிறம் 

துவர்ப்பு சுவை கொண்டது.


பாக்கு சத்து

துவர்ப்பு சுவை உடையது.

கருப்பு நிறம் கொண்டது.

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

சளி நீங்க

திப்பிலி

திப்பிலி வகைகள்

யானை திப்பிலி
அரிசி திப்பிலி



திப்பிலியின் பயன்பாடுகள்

திப்பிலி சூரணத்தை தேனுடன்
சாப்பிட

இரும்பல்

குன்மம்
இரைப்பு
ஈளை
பாண்டு

மயக்கம்
ருசியின்மை
பொருமல்
தலைவலி நீரேற்றம்
தொண்டை புண்
மூக்கு காது நோய்கள்
தீரும்.



பூனைக்காலி வெள்ளை வெட்டை தீர

பூனைக்காலி வெள்ளை வெட்டை  பெரும்பாடு பாரிசவாதம் வயிற்று வீக்கம் சோர்வு  கற்றாழை நாற்றம்  கரப்பான்  போன்றவை நீங்கி உடல் வலுக்கும்.